Search

Filter Stream

Select the types of content you would like to see.

Puthagaram, Tamil Nadu, India
  • திருவாசகம்-திருச்சாழல்பாடல் எண் : 20அருந்தவருக் காலின்கீழ்அறமுதலா நான்கனையும்இருந்தவருக் கருளுமதுஎனக்கறிய இயம்பேடீஅருந்தவருக் கறமுதல்நான்கன்றருளிச் செய்திலனேல்திருந்தவருக் குலகியற்கைதெரியாகாண் சாழலோ.அருமையாக தவம் செய்பவருக்கு தொடர்ந்து வளரும் தன்மையுடன் வந்து அறத்தையும் நான்கு மறைகளையும் அண்டி வந்தவருக்கு அருள்வது நான் அறிய ஏன் என்ற சொல் என்றால் அருந்தவருக்கும் உலக இயற்கை தெரியாது என கண்டு அறிந்து விளையாடு.‪#‎திருவாசகம்‬

    Show more
    remove Sivakumar Sivayogi
  • திருவாசகம்-திருவம்மானைபாடல் எண் : 11செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினான்அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்தஅப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலேஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும்அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்.சொல்ல முடியாதபடி உடல் அழகு தந்து பகுதியாக உள்ளவன் தென்னவன் பெருந்துறையான் தப்பாமல் அவன் தாள் அடைபவர்கள் நெஞ்சம் உருகும் தன்மை அருள்பவன் அந்த பாண்டி நாட்டை சிவலோகமாய் செய்த அப்பார் சடையப்பன் ஆனந்த வார் கழல் ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளத்தில் குடி இருக்கும் அப்பாலுக்கு அப்பால் உள்ளவனை பாடி மகிழுங்கள் அம்மானாய்.‪#‎திருவாசகம்‬

    Show more
    remove Sivakumar Sivayogi
  • பாடல் எண் : 53போரே றேநின் பொன்னகர்வாய்நீபோந் தருளி யிருள்நீக்கிவாரே றிளமென் முலையாளோடுடன்வந் தருள அருள்பெற்றசீரே றடியார் நின்பாதஞ்சேரக் கண்டுங் கண்கெட்டஊரே றாய்இங் குழல்வேனோகொடியேன் உயிர்தான் உலவாதே.பேர் பெற்றவனே உன் பொன் நிகர் வாய் போந்தருளி இருளை அகற்றி இளமென் முலையாளுடன் வந்தருள அருள் பெற்ற சீர் பெற்ற அடியர் நினது பாதத்தை சேரக் கண்டும் கண் கெட்டு ஊர் ஊராய் உழல்வேனோ கொடியவனான என் உயிர் தான் பிரியாதோ.‪#‎திருவாசகம்‬

    Show more
    remove Sivakumar Sivayogi
  • பாடல் எண் : 52செய்வ தறியாச் சிறுநாயேன்செம்பொற் பாத மலர்காணாப்பொய்யர் பெறும்பே றத்தனையும்பெறுதற் குரியேன் பொய்யிலாமெய்யர் வெறியார் மலர்ப்பாதம்மேவக் கண்டுங் கேட்டிருந்தும்பொய்ய னேன்நான் உண்டுடுத்திங்கிருப்ப தானேன் போரேறே.செய்வதை அறியாத சிறுமைபட்டவனாய் ஆனேன். செழுமையான பொற்பாத மலரை காணாத பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுவதற்கு உரிமையுள்ளவன். பொய் இல்லாத மெய்யர் ஆர்வம் குறையாது மலர் பாதம் மேவக் கண்டும் கேட்டும் பொய்யாக இருந்தேன். நான் உண்டும் உடுத்தியும் இருப்பவனானேன் பேர் பெற்றவனே.‪#‎திருவாசகம்‬

    Show more
    remove Sivakumar Sivayogi
  • பாடல் எண் : 49 கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீ றிட்ட அன்பரொ டியாவருங் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை... எட்டி னோடிரண் டும்அறி யேனையே. பாசக் கட்டுகளை அறுத்து என்னை ஆட்கொண்ட நீ கண்ணார நிறு புசிய அன்பர்களுடன் யாவருங் காணவே பட்டி மண்டபம் ஏற்றினாய். ஏற்றி எட்டு இரண்டு என்ற அ உ அறியச் செய்தாயே.‪#‎திருவாசகம்‬

    Show more
    remove Sivakumar Sivayogi
  • பாடல் எண் : 48
    செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
    புல்வ ரம்பின்றி யார்க்கும் அரும்பொருள்
    எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
    கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே.
    செல்வம் வறுமை என்று இல்லாமல் விண்ணோர் புழ புல் என்ற வரம்பில்லாமல் யார்க்கும் அரும் பொருளாய் எல்லையின்று இருப்பதின் பாதம் கண்டும் பிரித்தனன் என்றால் கல் போன்ற மனம் அடைந்த காரணமே.
    ‪#‎திருவாசகம்‬

    Show more
    remove Sivakumar Sivayogi
  • பாடல் எண் : 45 போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின் றாற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன் ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங்... கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே. போற்றி என்றுப் புரண்டும் புகழ்ந்தும் நினைத்து ஆற்றவில்லை. மிகுந்த அன்பால் அழைக்கவில்லை. நீயாகவே ஏற்று வந்து தாமரை தாள் தந்து எமனை எதிர்த்த கொள்கை என் கொள்கையே.‪#‎திருவாசகம்‬

    Show more
    remove Sivakumar Sivayogi
  • பாடல் எண் : 44 காண லாம்பர மேகட்கி றந்ததோர் வாணி லாம்பொரு ளேஇங்கொர் பார்ப்பெனப் பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்... பூணு மாறறி யேன்புலன் போற்றியே. காணலாம் பரமே கண்டு மகிழ்ந்தவர் விளிக்கி சொல்லமுடியா பொருளே இங்கும் ஓர் பார்பானாய் தொடர்கிறேன். வளர்ந்து ஆக்கையை விட்டு உன்னை பூண அறியேன் புலன் போற்றியே.‪#‎திருவாசகம்‬

    Show more
    remove Sivakumar Sivayogi
  • பாடல் எண் : 43 மேலை வானவ ரும்மறி யாததோர் கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே ஞால மேவிசும் பேஇவை வந்துபோம்... கால மேஉனை யென்றுகொல் காண்பதே. மேலான வானவர்களும் அறியாத ஓர் கோலமே என்னை ஆட்கொண்ட கூத்தனே, விரிந்த உலகே துளிர்விடும் விசும்பே, இவைகள் வந்து போகும் காலமே, உன்னை என்று முழுமையாக ஏற்க காண்பதே.‪#‎திருவாசகம்‬

    Show more
    remove Sivakumar Sivayogi
  • பாடல் எண் : 39ஓய்வி லாதன உவமனில் இறந்தனஓண்மலர்த் தாள்தந்துநாயி லாகிய குலத்தினுங் கடைப்படும்என்னைநன் னெறிகாட்டித்தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன்தலைவனை நனிகாணேன்தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன்செழுங்கடல் புகுவேனே.ஓய்வின்று செயல்பட்டவை தனித்தனியாக இறந்தன. தனக்காக மலர் தாள்தந்து இனத்திற்கே கேடு செய்யும் குலத்தை விட கிழான என்னை நல்ல பாதை காட்டி தாயைப் போல் இனிமையான நல்லருள் புரிந்தான். அந்த தலைவனை விரும்பி காண முயலவில்லை. நெருப்பும் மிதிக்கவில்லை, தரையில் உருளவில்லை, இருப்பினும் செழுமையான கடலில் புகுவேன்.#திருவாசகம்

    Show more
    remove Sivakumar Sivayogi
Close

Press esc to close.
Close
Press esc to close.
Close

Connecting to your webcam.

You may be prompted by your browser for permission.